Last Updated : 19 Mar, 2014 10:24 AM

 

Published : 19 Mar 2014 10:24 AM
Last Updated : 19 Mar 2014 10:24 AM

‘டூப்ளிகேட்’ மோடியால் பரபரப்பு

கடந்த திங்கள்கிழமை ஹோலி பண்டிகையின்போது வாரணாசி மக்களுக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது. நகரின் கங்கை கரைகளில் நண்பர்களுடன் நரேந்திர மோடி உலவுவதாக தகவல்கள் பரவின. இதைப்பார்க்க வந்த கூட்டத்தினர் மோடியைப்போல் தோற்றம் கொண்டவரை பார்த்து ஆச்சரியப்பட்டனர். மோடியைவிட சற்று உயரம் குறைவான அவரது பெயர் அபிநந்தன் பாதக்.

உத்தரப் பிரதேசத்தின் சஹாரான்பூரை சேர்ந்த இவர், பாஜக ஊறுப்பினர். மோடியை போலவே கையை உயர்த்துவது, வணக்கம் தெரிவிப்பது என பல உடல் அசைவுகள் அவரோடு ஒத்து போகின்றன. நரைத்த தாடி , தலைமுடி, நடை, உடை, பாவனைகள் அனைத்தும் மோடியை போலவே அபிநந்தன் பாதக் தோற்றமளிக்கிறார்.

இது குறித்து பாதக் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘மோடி பிரதமராக வர வேண்டும் எனபல வருடங்களாக காத்திருக்கிறேன். அவரை போலவே நான் இருப்பதை பார்த்து பலரும் ஏமாந்து விடுகிறார்கள். இதன் பலனை மோடிக்கே அளிக்க வேண்டி வாரணாசியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்காக, பாஜக தலைமையிடம் அனுமதி கேட்டு காத்திருக்கிறேன்.’ எனக் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x