

இந்திய ராணுவத்தக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்களைக் கைது செய்யக் கோரியும், ஆம்னஸ்டி அமைப்புக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடகாவில் ஏபிவிபி அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா சார்பில், கடந்த 13-ம் தேதி பெங்களூருவில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் சிலர் இந்திய ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பாஜக, பஜ்ரங் தளம், ஏபிவிபி ஆகிய அமைப்பினர் போராட்டத்தில் குதித்ததால், ஆம்னஸ்டி அமைப்பினர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்திய ராணு வத்திற்கு எதிராக முழக்கம் எழுப் பியவர்களைக் கைது செய்யக் கோரி ஏபிவிபி அமைப்பினர் பெங்க ளூரு, மைசூரு, ஹூப்ளி, கொப்பள் உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். நேற்று பெங்களூருவில் மைசூரு வங்கி சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக இளைஞர் அணியினரும், 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.
அப்போது இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஆம்னஸ்டி இந்தியா அமைப்புக்கு எதிராக வும், யுனைடட் தியாலஜிக்கல் கல் லூரிக்கு எதிராகவும் முழக்கம் எழுப் பினர். மேலும் ஆம்னஸ்டி அமைப் புக்கு தடைவிதிக்கக் கோரியும், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் துண் டறிக்கைகளை விநியோகித்தனர்.
மேலும் போலீஸாருக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர்.
இதனால் போலீஸாருக் கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆம்னஸ்டி அமைப்பினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கா விடில் விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரித்தனர். இதையடுத்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் என்.எஸ்.மேக்ரிக், “சம்பந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும். மாண வர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குத் திரும்ப வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். போலீஸாரின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் கல்லூரிக்குத் திரும்பினர்.
இதனிடையே ஏபிவிபி அமைப்பினரின் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவ வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஹூப்ளி, கொப்பள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.