கட்சி மேலிட ஆணை: உச்ச நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் ஆப்சென்ட்

கட்சி மேலிட ஆணை: உச்ச நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் ஆப்சென்ட்
Updated on
1 min read

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் முன்பு அதிமுகவினர் குழுமியிருந்தது போல் உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிமுகவினர் எவரும் இல்லை.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

இந்நிலையில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் முன்பு அதிமுகவினர் குழுமியிருந்தது போல் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் எவரும் காணப்படவில்லை.

முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வளாகத்திலும், ஜாமீன் மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டபோதும் ஏராளமான அதிமுகவினர் குழுமியிருந்தனர். இதனால், கர்நாடக போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதில் திணறிப் போயினர்.

அமைச்சர்கள், எம்.பி.களும்கூட நீதிமன்ற வளாகத்தில் காத்துக் கிடந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியது. சைரன் கார்களில் நீதிமன்ற வளாகத்தில் காத்துக்கிடப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், கட்சி மேலிட உத்தரவை அடுத்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிமுகவினர் எவரும் குழுமவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in