Last Updated : 21 Feb, 2014 12:00 AM

 

Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

தமிழக அரசுக்கு எதிராக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதாக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து பெங்களூரில் காங்கிரஸார் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறி வாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா புதன்கிழமை அறிவித்தார்.

ஜெயலலிதாவின் முடிவிற்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் வியாழக்கிழமை பெங்களூரில் உள்ள அனந்த ராவ் சதுக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், ஜெயலலிதாவிற்கு எதிராகவும் போராட்டத்தில் குதித்தனர்.

கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். இதற்கிடையே காங்கிரஸ் தொண்டர்களில் சிலர் ஜெய லலிதாவின் உருவப் படத்தை எரித்தனர். இதனை அங்கு பாது காப்பிற்காக வந்திருந்த பெங்களூர் போலீஸார் தடுக்கவில்லை.

எஸ்.எஸ்.பிரகாசம் இது தொடர்பாகக் கூறுகையில், “ராஜீவ் காந்தியை கொன்றவர் களை ஜெயலலிதா விடுவிப்ப

தாக அறிவித்தது சட்டப்படி குற்றம். அந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமெனில் பல்வேறு நடை முறைகள் உள்ளன. அதனை ஜெயலலிதா பின்பற்றவில்லை.

உச்ச நீதிமன்றம் ராஜீவ் கொலையாளிகளின் தண்ட னையை குறைத்ததே தவிர, குற்றமற்றவர்கள் என கூறவில்லை. ஆனால் ஜெயலலிதா அரசியல் ஆதாயத்திற்காக இதனை செய்துள்ளார்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x