

டீசல், காஸ் மற்றும் மண்ணெண்ணை விலையை உடனடியாக உயர்த்தக் கோரி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்குப் பாரிக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
இத்தகவலை, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்த பின்னர் கீரித் பாரிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 அதிகரிக்கவும், மண்ணெண்ணை விலையை லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்கவும் அதே போல் தற்போது வழங்கப்படும் ஆண்டுக்கு 9 காஸ் சிலிண்டர்களை 6 காஸ் சிலிண்டர்களாக குறைக்கவும், மேலும் காஸ் சிலிண்டர் விலையை ரூ.250 உயர்த்தவும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.