Last Updated : 15 Jun, 2015 04:01 PM

 

Published : 15 Jun 2015 04:01 PM
Last Updated : 15 Jun 2015 04:01 PM

லலித் மோடிக்கு சுஷ்மா உதவிய விவகாரம்: பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் சரமாரி தாக்கு

ஊழல் புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும், மன்னிப்பு கோர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி, "இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். லலித் மோடிக்கு சுஷ்மா இச்சலுகையை செய்வதற்கு காரணம் அவரும் 'மோடி' என்பதாலேயே. லலித் மோடிக்கு விசா வழங்க வெளியுறவு அமைச்சரே உதவியிருப்பதால் இதற்கு அரசும் பொறுப்பே. எனவே பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுகதா ராய், "ஒரு வெளியுறவு அமைச்சர் செய்யத்தக்க செயல் அல்ல இது. இத்தகைய விவகாரத்தில் அவர் தலையிட்டிருக்கக் கூடாது. தவறு செய்துவிட்டதால் அவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, "இப்பிரச்சினையை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே நாட்டு மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் பிரதமர் மோடியே விளக்க வேண்டும். வெளியுறவு அமைச்சர் மீது இத்தகைய முறைகேடு புகார் எழுந்திருக்கும் நிலையில் பிரதமர் மோடி மவுனியாக இருப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், "வெளியுறவு அமைச்சர் முன்னாள் ஐபிஎல் ஆணையர் லலித் மோடிக்கு உதவியது தவறு. ஊழலுக்கு எதிரானது எங்கள் அரசு என மார் தட்டிக் கொள்ளும் பாஜக தங்கள் அமைச்சர் ஊழல்வாதிக்கு உதவியதன் பின்னணியில் சட்டவிதிமீறல் இருக்கிறது என்பதை மறந்துவிட்டது. இது ஒன்றேபோதும் பாஜக ஆட்சி ஊழலுக்கு எதிரானது அல்ல என்பதை நிரூபிக்க" எனக் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்போம் எனக் கூறிவரும் பாஜக அரசு லலித் மோடிக்கு விசா வழங்கிய சர்ச்சையில் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதப்பட்ட அரச கடிதங்களை பகிரங்கப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில்,

முன்னதாக, ஊழல் புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க உதவியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக் கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், சுஷ்மா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. அதேவேளையில், சுஷ்மாவுக்கு ஆதரவாக மத்திய அரசும் பாஜகவும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது தொடர்பான விரிவான செய்தி: >ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடிக்கு உதவியதால் அமைச்சர் சுஷ்மாவுக்கு நெருக்கடி: பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடியை சுஷ்மா நேற்று நேரில் சந்தித்து இதுபற்றி எடுத்துரைத்த. பின்னர் ட்விட்டரில் சுஷ்மா கூறியதாவது:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் லலித் மோடி என்னிடம் பேசினார். அப்போது, “என் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆகஸ்ட் 4-ம் தேதி அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. அதற்கான ஒப்புதல் ஆவணங்களில் கணவன் என்ற முறையில் நான் கையெழுத்திட வேண்டும். ஆனால் போர்ச்சுக்கல் நாட் டுக்கு செல்ல விசா வழங்க இங்கிலாந்து அரசு மறுப்பு தெரிவிக்கிறது” என்று லலித் மோடி என்னிடம் கூறினார். அதன்பிறகுதான், மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவி செய்தேன் என்று சுஷ்மா குறிப்பிட்டத்து கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x