பிஹார் தேர்வு முறைகேடு வழக்கு: பிளஸ்-2 அறிவியல் பாடப் பிரிவில் 3-ம் இடம் பிடித்த மாணவன் கைது

பிஹார் தேர்வு முறைகேடு வழக்கு: பிளஸ்-2 அறிவியல் பாடப் பிரிவில் 3-ம் இடம் பிடித்த மாணவன் கைது
Updated on
1 min read

பிஹார் பிளஸ் 2 தேர்வு முறை கேடு வழக்கில், அறிவியல் பாடப் பிரிவில் சர்ச்சைக்குரிய வகை யில் 3-ம் இடம் பெற்ற மாணவனை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.

பிஹார் பிளஸ் 2 தேர்வில் தகுதி யில்லாத மாணவர்கள் முறை கேடாக தேர்ச்சி பெற்றதோடு, முதலிடங்களைப் பிடித்ததாக எழுந்த புகார் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

மாநில தேர்வு வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத், அவரின் மனைவியும் முன்னாள் எம்எல்ஏவுமான உஷா சின்ஹா, விஷுன் ராய் கல்லூரி முதல்வர் பச்சா ராய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கலைப் பாடப் பிரிவில் முறை கேடாக முதலிடம் பிடித்த மாணவி ரூபி ராய் கைது செய்யப்பட்டு, கடந்த திங்கள்கிழமை பாட்னா நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளிவந்துள்ளார்.

இந்நிலையில், அறிவியல் பாடப்பிரிவில் 3-ம் இடம் பிடித்த ராகுல் குமாரை சிறப்பு புலனாய் வுக் குழுவினர் கைது செய்துள்ள னர். இதுகுறித்து பாட்னா காவல் கண்காணிப்பாளரும், சிறப்பு புலனாய்வுக் குழுவில் அங்கம் வகிப்பவருமான சந்தன் குஷ்வாஹா கூறியது:

அஸாம்பூர் கிராமத்தில் உள்ள தனது உறவினரான துர்கேஷ் சிங் வீட்டில் தங்கியிருந்த ராகுல் குமாரை புதன்கிழமை அன்று சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசா ரணையில், பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவில் 3-ம் இடம் பெறு வதற்கு, ரூ.5 லட்சம் வழங்கப்பட் டது தெரியவந்துள்ளது. தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் 4 பேரில் ராகுலும் ஒருவர்.

ரூபி ராய் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்துள்ளார். ஷாலினி ராய் மற்றும் சவுரவ் ஸ்ரேஸ்த் ஆகியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in