Last Updated : 06 May, 2017 02:39 PM

 

Published : 06 May 2017 02:39 PM
Last Updated : 06 May 2017 02:39 PM

தீவிரவாதத் தாக்குதல்களினால் முடிவு: காஷ்மீரில் 40 வங்கிக் கிளைகளில் பணப்பரிவர்த்தனை நிறுத்தம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் வங்கிகளைக் குறிவைத்து தாக்கி கொள்ளைகளில் ஈடுபடுவதால் 40 வங்கிக் கிளைகளில் ரொக்கப் பரிவர்த்தனையை நிறுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மற்றும் ஷோபியான் மாவட்டங்களில் ஆபத்தான பகுதிகளில் உள்ள 40 வங்கிக்கிளைகளில் பணப்பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைப்புகள் இந்த அறிவுரையை வழங்கியதற்கு இணங்க மாவட்ட நிர்வாகம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் வங்கி, எலகுவாய் டிஹாட்டி வங்கி ஆகியவற்றை தீவிரவாதிகள் குறிவைத்துத் தாக்கி வருவதால் இந்த வங்கிகளின் கிளைகளில் ரொக்கப்பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளது.

மற்ற வங்கி நடவடிக்கைகளும், ஏடிஎம்களும் வழக்கம் போல் இயங்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வங்கிகள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரையில் இந்த உத்தரவு நீடிக்கும் என்று தெரிகிறது.

தோட்டாக்கள் துளைக்காத வங்கி வேன்கள், வங்கிக் கிளைகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் எண்ணிக்கையைக் கூட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்னும் சில நாட்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x