Last Updated : 11 Feb, 2017 08:18 AM

 

Published : 11 Feb 2017 08:18 AM
Last Updated : 11 Feb 2017 08:18 AM

துணை ராணுவ பாதுகாப்புடன் இன்று உ.பி. சட்டப்பேரவை தேர்தல்: 73 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் 73 தொகுதி களுக்கு இன்று முதல்கட்டத் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு நியாயமாகவும், சுமூகமாகவும் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 839 வேட்பாளர்களின் தலை யெழுத்தை 2.6 கோடி வாக்கா ளர்கள் தீர்மானிக்கவுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. பாஜக, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக் தளம், சுயேச்சை என மொத்தம் 839 வேட்பாளர்கள் முதல் கட்டத் தேர்தல் களத்தில் போட்டி யிடுகின்றனர். 15 மாவட்டங்களில், 73 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக 26,823 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிக்க தகுதிப்பெற்ற 2.6 கோடி வாக்காளர்களில் 1.17 கோடி பேர் பெண்கள். 1,508 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வர்கள். அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக சஹிபாபாத்தும், குறைந்த வாக்காளர்கள் கொண்ட சிறிய தொகுதியாக ஜலேசரும் கண்டறியப்பட்டுள்ளது. அதிக பட்சமாக தெற்கு ஆக்ராவில் 26 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். குறைந்தபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக ஹஸ்தினாபூர் உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் (நொய்டா தொகுதி), காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் பிரதீப் மதூர் (மதுரா), அவரை எதிர்க்கும் பாஜக செய்திதொடர்பாளர் காந்த் சர்மா, பாஜக எம்.பி ஹகும் சிங்கின் மகள் ம்ரிகன்கா சிங் (கைரானா), சர்ச்சைக்குரிய பாஜக எம்எல்ஏக்கள் சங்கீத் சோம் (சர்தான்), சுரேஷ் ரானா (தானா பவன்) ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்க வர்கள்.

அதேபோல் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் (மீரட்), சமாஜ்வாதி சார்பில் களமிறங்கி யுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுவின் மருமகன் ராகுல் சிங் (சிக்கந்தராபாத்), ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங் (அத்ரவுலி) ஆகியோரும் இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.

முதல் கட்டத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நடை பெறும் ஷம்லி, முஸாபர்நகர், உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கலவர அபாயம் கொண்ட முஸாபர் நகரில் 887 வாக்குச்சாவடிகளிலும் 6,000 துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x