ஜம்மு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர் கைது

ஜம்மு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர் கைது
Updated on
1 min read

இந்திய ராணுவம் பற்றிய முக்கியத் தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய உளவாளி இன்று (சனிக்கிழமை) ஜம்முவில் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக இந்திய ராணுவ புலனாய்வு மையம் வெளியிட்ட தகவலில், "சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சான்ஜியா கிராமத்தைச் சேர்ந்த போஜ்ராஜ் என்பவரின் நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தது. விசாரணையில் அவர் இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையின் ஜெர்டா கிராமத்தில் சுற்றித் திரிந்த போஜ்ராஜ் தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீஸார் ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் போஜ்ராஜை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.

சிம் கார்டு, வரைபடங்கள் பறிமுதல்:

கைது செய்யப்பட்ட போஜ்ராஜிடமிருந்து இரண்டு சிம் கார்டுகள், இரண்டு கைபேசிகள், வரைபடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in