

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி யை நோக்கி முன்னேறிக் கொண்டி ருக்கிறது. பணவீக்கம் குறைந்து வருவது நல்ல அறிகுறி என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாள்கள் நிறைவையொட்டி செய்தியா ளர்களை சனிக்கிழமை சந்தித்த ஜேட்லி, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி யாகும் என்று குறிப்பிட்டார். நீண்ட கால கொள்கைகளின் வெளிப்பாடாக இந்த வளர்ச்சி அமைந்துள்ளது.
அரசு எடுக்கும் புதிய முடிவுகளுக்கு உரிய பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். எதிர்வரும் காலாண்டுகளில் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றார்.
உற்பத்தித் துறையின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது, சேவைத் துறையிலும் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து வருகிறது. பணவீக்கமும் கட்டுக்குள் உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இது வளர்ச்சிக்கான அறிகுறி என்று குறிப்பிட்டார்.
கடந்த மூன்று மாதங்களில் அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்ட ஜேட்லி, பாதுகாப்புத் துறை மற்றும் ரயில்வேத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு எளிமையாக்கப்பட்டுள்ளது.
உடனடியாக முடிவெடுப்பது, வரி விவகாரங்களுக்கு உடனடி தீர்வு காண ஏற்பாடு, சில குறிப்பிட்ட துறைகளில் அனுமதி, விரைவாக முடிவெடுப்பது, சமூக சேவை திட்டங்களுக்கான செலவை சீராக கடைப்பிடிப்பது ஆகிய நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை அளிக்கத் தொடங்கியுள்ளன.
எதிர்காலத்தில் அரசு பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பாக புதிய கொள்கை கொண்டு வரப்பட உள்ளது. அத்துடன் சரக்கு சேவை வரி முறை அமலாக்கம் மற்றும் காப்பீட்டு மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றுவது உள்ளிட்ட பணிகளை அரசு மேற்கொள்ள உள்ளது என்றார்.
அதிகார குவிப்பு இல்லை
மோடி தலைமையிலான அரசில் அனைத்து அமைச்சர்களும் சுதந்திரமாக செயல்படுகின்றனர். அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் பரவலாக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமைச்சர்கள் அவர்களுக்கான கடமைகளை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும். முடிவுகள் பெரும் பாலும் அந்தந்த அமைச் சர்களின் பரிந்துரையோடு எடுக்கப்படுகிறது.
தேவைப்பட்டால் பிரதமரிடமோ அல்லது அவரது அலுவல கத்துடனோ கலந்து ஆலோ சிக்கப்படுகிறது. நிதி அமைச்ச கமாக இருந்தாலும் சரி, பதுகாப்புத் துறையாக இரு ந்தாலும் அந்தந்த அமைச்சகங்கள்தான் முடிவுகளை எடுக்கின்றன.
இதற்கு பிரதமரோ அல்லது பிரதமர் அலுவலகமோ ஒப்புதல் அளிக்கிறது என்றார்.
நிலம் கையகப்படுத்துவது தொடர்பான புதிய மசோதாவைக் கொண்டுவருவதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைப் பெறுவது மிகவும் சவாலான விஷயம் என்று குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக பிரதான கட்சிகளுடன் தாம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விஷயத்தில் நீக்கு போக்குடன் நடந்து கொள்வது குறித்து கிராம மேம்பாட்டு அமைச்சகத்துடன் பேசி வருவ தாகவும் ஜேட்லி கூறினார்.