

மணிப்பூர் மாநிலத்தின் தோபல் மாவட்டம் வாங்ஜிங் கிராமத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
குத்துச் சண்டை வீராங்கனை மோரி கோம் போன்ற விளையாட்டு வீரர்களை மணிப்பூர் மாநிலம் உருவாக்கியுள்ளது. இந்த மாநில இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க போதுமான கட்டமைப்பு வசதிகள் தேவை.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநில விளை யாட்டுத் துறைக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும். இந்த மாநிலத்தில் தேசிய தொழில்நுட்ப கழகத்தை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஷில்லாங்கில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வாங்ஜிங் கிராமத்துக்கு வந்த ராகுல் காந்தி சுமார் அரை மணி நேரம் அந்த கிராமத்தில் இருந்தார்.