

அருங்காட்சியகங்களை நிர்வகிப்பது, பராமரிப்பது சம்பந்தப்பட்ட ஆய்வுகள் இந்தியா வில் புறக்கணிக்கப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன்சிங் வேதனை தெரிவித்தார்.
கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமைவாய்ந்த இந்திய அருங் காட்சியகத்தின் 200வது ஆண்டு விழா தொடக்க நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று பிரதமர் பேசியதாவது:
இந்தியாவில் அருங்காட்சியகம் சார்ந்த படிப்புகள், ஆய்வுகள், புறக்கணிக்கப்படுகிறது. இது துரதிருஷ்டவசமானது. இதை மாற்றி அமைக்கும் பொறுப்பை தலைமையேற்று நடத்தவேண்டி யது கொல்கத்தாவில் உள்ள இந்த அருங்காட்சியகம்தான். இப் படிச் செய்வதால், தாம் சேகரித்து வைத்துள்ள அருங்காட்சிப் பொருள்களை பயன்தரத்தக்கதாக மாற்றுவதுடன் நாட்டில் உள்ள இதர அருங்காட்சியகங்களுக்கும் துணைபுரிய முடியும்.
அருங்காட்சியக பொறுப்பாளர் களே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும். நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் தமது ஊழியர்களுக்கு முதலில் பயிற்சி தரவேண்டும்.
அருங்காட்சிப் பொருள்களை சேகரித்துவைப்பது மட்டுமே போதுமானதாக ஆகிவிடாது. அறிவைப் பரப்புவோரா கவும் இருக்கும்வகையில் செயல்பட வேண்டும்.
தம்மிடம் உள்ள சேகரிப்புகளை ஆவணப்படுத்துவதும் ஆய்வு செய்வதும் பகுப்பாய்வு செய் வதும் வேறு அருங்காட்சியகங்க ளில் இதே போன்றுள்ள காட்சிப் பொருள்களை ஒப்பீடு செய்வதும் பிற அருங்காட்சியகங்களுடன் கூட்டு வைப்பதும் அவசியமானது.
தனித்துவம்மிக்க அருங்காட்சி யகங்கள் உள்ளதை வைத்தே பெரிய நகரங்களுக்கு புகழ்கிடைக் கின்றன. அவற்றைக்காண பல் லாயிரம் மைல் தொலைவிலிருந் தும் மக்கள் தேடி வருகிறார்கள் என்றார் பிரதமர்.
இந்நிகழ்ச்சியில் அருங்காட்சி யகத்தின் 200-வது ஆண்டு நினைவு தபால் தலையை பிரதமர் வெளியிட்டார்.
அருங்காட்சியகத்தின் செப் பனிடப்பட்ட புதிய, வளாகத்தை திறந்து வைத்த பிறகு சீரமைக் கப்பட்ட அருங்காட்சிப் பொருள் கூடங்களை ஆளுநர் எம்.கே.நாராயணன், முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் சென்று பார்வையிட்டார்.
இந்த அருங்காட்சியகத்தை செப்பனிட மத்திய கலாசார அமைச் சகம் ரூ. 100 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. பெங்கால் ஏசியா டிக் சொசைட்டி என்ற அமைப்பால் 1814ல் இந்தியன் மியூசியம் (இந்திய அருங்காட்சியகம்) நிறுவப் பட்டது.