தேர்தலில் பண விநியோகத்தை கட்டுப்படுத்த புதிய நடத்தை விதிகள்: நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு

தேர்தலில் பண விநியோகத்தை கட்டுப்படுத்த புதிய நடத்தை விதிகள்: நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு
Updated on
1 min read

மாநிலங்களவை காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சுதர்சன நாச்சி யப்பன் தலைமையிலான மத்திய பணியாளர் நலன், மக்கள் குறைதீர், சட்டம், நீதித்துறைக் கான நாடாளுமன்ற நிலைக்குழு வில் 28 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த குழுவினர் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கத்தை ஆய்வு செய்ய தமிழகம், மத்தி யப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சுற்றுப்பயணம் செல்கிறது. இக்குழு வரும் 21, 22-ம் தேதிகளில் சென்னையில் முகா மிட்டு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடு ஆலோசனை நடத்த உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது பண விநியோக புகார் காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. எனவே பண விநியோகம், இலவச பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பது தொடர்பான புதிய நடத்தை விதிகள் வரையறுக் கப்பட உள்ளன. இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக்குழு தீவிர மாக ஆய்வு செய்து வருகிறது.

குழுவின் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. நமது நாட்டில் தேர் தலை நேர்மையாக நடத்த பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறோம். கடந்த ஆண்டு எங்கள் குழு நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கையில், மக்க ளவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரை செய்யப்பட்டது. தற் போது பண விநியோகம், இலவச பொருட் கள் வழங்கப்படுவதை கட்டுப் படுத்துவது தொடர்பான நடத்தை விதிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்பின் எங்கள் பரிந்துரைகளை நாடாளு மன்றத்தில் சமர்ப்பிப் போம். இவ்வாறு அவர் தெரிவித் தார்.

சுதர்சன நாச்சியப்பனின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் நிறைவடைகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in