மும்பையில் நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து: 5 மாலுமிகள் காயம்

மும்பையில் நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து: 5 மாலுமிகள் காயம்
Updated on
1 min read

மும்பை கடல் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 மாலுமிகள் காயமடைந்தனர்.

ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் மாலுமிகள் 5 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாலுமிகள் அனைவரும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

நீர்மூழ்கிக் கப்பலுக்கு பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்ல என கடற்படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியக் கடறபடை நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து ஏற்படுவது இது 3-வது முறையாகும். கடந்த ஆண்டு ஐ.என்.எஸ். சிந்துரக்‌ஷக் நீர்மூழ்கிக் கப்பலில் தீ பிடித்த போது 18 மாலுமிகள் பலியாகினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in