நீட் தேர்வுக்கு மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு

நீட் தேர்வுக்கு மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு
Updated on
1 min read

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு தேர்வு நடத்த மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு மாநிலங்களவையில் நேற்று அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று கூடியதும், இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன், ‘‘இந்திய மருத்துவ கவுன்சில் (திருத்த) மசோதா, 2016 மற்றும் பல் மருத்துவ (திருத்த) மசோதா 2016 இரண்டுமே அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் சிபிஎஸ்சி பாடப்பிரிவில் படிக்காத ஏழை குழந்தைகளும், ஊரக பகுதி மக்களும் மிகுந்த பாதிப்படைவார்கள்.

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர் கள் கடுமையாக பாதிப்படைந் துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தி வருவதால், இந்த மசோதாவை கொண்டு வரவேண்டிய அவசியமே இல்லை’’ என்றார்.

அதே சமயம் சமாஜ்வாடி உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரி வித்தன. மேலும் தனியார் கல்லூரிகள் முறையாக கண் காணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் ஒரே மாதிரியான மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் வகையில் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதற்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்குவதற்காக மசோதா இயற்றப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் இயங்கும் அரசு கல்லூரிகளுக்கு மட்டும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. எனினும் தனியார் கல்லூரிகள் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு, அதற்கான அவசர சட்டம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in