

உ.பி.யில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) பொதுச் செயலாளர் ஜெயந்த் சவுத்ரி, அவரது கட்சி வேட்பாளர் பிஜேந்தர் மாலிக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷாம்லி மாவட்டம், பாப்ரி காவல் எல்லைக்குட்பட்ட கஞ்செர்ஹெரி என்ற கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெயந்த் சவுத்ரியும், கட்சியின் ஷாம்லி தொகுதி வேட்பாளருமான பிஜேந்தர் மாலிக்கும் பேசினர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் இவர்கள் பொதுக்கூட்டம் நடத்தியதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.
ஜெயந்த் சவுத்ரி, ஆர்எல்டி தலைவர் அஜீத் சிங்கின் மகன் ஆவார்.