Last Updated : 31 Oct, 2014 09:59 AM

 

Published : 31 Oct 2014 09:59 AM
Last Updated : 31 Oct 2014 09:59 AM

கருப்பு பண விவகாரத்தில் ரகசியம் காக்கப்படும்: சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவர் உறுதி

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் எம்.பி. ஷா கூறியுள்ளார்.

அதே சமயம், வெளிநாடு களுடன் மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு மதிப்பளித்து, எங்களிடம் உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள வர்கள் குறித்த விவரத்தை வெளியிட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள வங்கி களில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருந்ததாக சந்தேகிக்கப் படும் 627 பேர் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று முன்தினம் சமர்ப்பித்தது.

இந்நிலையில், கருப்பு பணம் வைத்திருப்போர் பற்றிய விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான எம்.பி. ஷா கூறியதாவது: எங்களைப் பொறுத்தவரை செல்வாக்கு மிக்கவர்கள், சாதாரணமான வர்கள் என்று எந்தவிதமான பாரபட்சமும் காட்ட மாட்டோம். அனைவரையும் சமமாக நடத்து வோம். நாட்டை கொள்ளை யடித்தது யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

வெளிநாடுகளுடன் மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, பட்டியல் தொடர்பான ரகசியத்தை காப்போம். ஒருவேளை அந்த ஒப்பந்தத்தை மீறினால், அந்நாடுகளிடமிருந்து மேலும் பல தகவல்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

கருப்பு பணம் பதுக்கிவைத்துள்ளவர்கள் மீதான விசாரணையை துரிதமாக நடத்தி வருகிறோம்.

விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம், எப்போது கருப்பு பணம் அனைத்தும் மீட்கப்படும் என்பது குறித்து என்னால் கூற முடியாது. எனினும், எங்களின் நடவடிக்கைகளால் சிறிதளாவது பலன் ஏற்படும் என்பதில் நம்பிக்கையுள்ளது.

எங்கள் விசாரணை தாமதமாக நடந்து வருவதாக கூறப்படுவது தவறான தகவல். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அளித்து, அவர்களின் விளக்கத்தை கேட்டு, அதன் பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த நடை முறைகளை நாங்கள் பின்பற்று வதற்கு இடையே, சம்பந்தப்பட்ட வர்கள் நீதிமன்றத்துக்கு சென்று தடை உத்தரவு பெறுகின்றனர்.

இந்நிலையில், எங்களால் முடிந்த அளவு விரைவாகவே பணியாற்றி வருகிறோம்.

கருப்பு பணத்தை பதுக்கிவைத் துள்ளவர்கள் மீது குறிப்பிட்ட கால அளவுக்குள் சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். இது தொடர்பாக மற்ற விசாரணை அமைப்புகளிடமும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளோம். இவ்வாறு எம்.பி. ஷா கூறினார்.

இக்குழுவின் துணைத் தலை வர் அரிஜித் பசாயத் கூறும் போது, “கருப்புப் பணம் பதுக்கி யுள்ளவர்கள் பற்றிய விவரங் களை தெரிவிக்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்க வுள்ளோம். இது தொடர்பாக விளம்பரங்களை வெளியிட உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x