

டெல்லியில் இளம்பெண்களை ஆண்கள் பின்தொடர்ந்து தொல்லை தரும் குற்றச்செயல் அதிகரித்து வருகிறது. இதற்கு பெண்கள் உயிர்பலி ஆவதும் அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க் கிழமை வடக்கு டெல்லியின் புராரி சாலையில் ஆசிரியை கருணா குமாரியை (21) பின்தொடர்ந்த சுரேந்தர் சிங் (34) கத்தியால் 22 முறை குத்திக் கொலை செய்தார்.
இந்நிலையில் நாட்டில் பெண்களை பின் தொடரும் குற்றங் களில் தலைநகர் டெல்லி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் வெளியிட்ட தேசிய குற்றப்பதிவு மையத்தின் (National Crime Records Bureau) அறிக்கையில் இத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 2015-ம் ஆண் டில் நாடு முழுவதிலும் பெண்களை பின் தொடரும் குற்றங்களின் எண் ணிக்கை 6,266 ஆகும். இதில் 1,399 குற்றங்களுடன் மகாராஷ்டிரா முத லிடத்திலும் 1,124 குற்றங்களுடன் டெல்லி 2ம் இடத்திலும் உள்ளன.
மகாராஷ்டிராவில் 1,000 ஆண் களுக்கு 929 பெண்கள் உள்ளனர். டெல்லியில் இந்த விகிதாச்சாரம் 1,000-க்கு 868 என்ற அளவில் உள்ளது. மகாராஷ்டிராவை விட டெல்லியில் ஆண் பெண் விகிதாச் சாரம் குறைவாக இருந்தபோதிலும் குற்றங்களின் எண்ணிக்கை அதிக மாக உள்ளது.
இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலி வால் கூறும்போது, “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் மட்டுமின்றி, பெண்களை பின் தொடரும் குற்றங்களிலும் டெல்லி தலைநகராக உள்ளது. கடந்த வாரம் 21 வயது பெண்ணை பின் தொடர்ந்த ஒருவர், தனது ஆசைக்கு அப்பெண் இணங்க மறுத்ததால் அவருக்கு தீ வைத்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அப்பெண் புகார் அனுப்பியுள்ளார்” என்றார்.
கடந்த 2015-ல் பெண்களை பின்தொடரும் குற்றங்கள் எண் ணிக்கையில் தெலங்கானா 3-வது இடத்திலும் (766), ஆந்திரா 4-வது இடத்திலும் (551), உ.பி. (519) 5-வது இடத்திலும் உள்ளன.
தவிர கர்நாடகா 123, கேரளா 61, தமிழ்நாடு 11, புதுச்சேரி 3 என்ற எண்ணிக்கையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.