

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவில் இளைஞர்கள் சரித்திரம் படைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரு மாநில தேர்தலிலும் பெருமளவில் மக்கள் வாக்களிக்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள் முன்வந்த வாக்களித்து, வாக்குப்பதிவில் சரித்திரம் படைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலுக்காக மோடி இரு மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளுக்குமே இத்தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.