Last Updated : 21 Jun, 2017 04:34 PM

 

Published : 21 Jun 2017 04:34 PM
Last Updated : 21 Jun 2017 04:34 PM

தானேவில் ஸ்வச் பாரத் நிதியை தவறாகப் பயன்படுத்திய 9 பேர் கைது

தானேவின் பிவாண்டி பகுதியில் கழிப்பறை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 'ஸ்வச் பாரத்' நிதியைத் தவறாகப் பயன்படுத்திய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிவாண்டி பகுதியின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த ரஜித் பிமார்த்தி, சுதர்சன் ஜக்கனி, அஞ்சனா தயாவத், ஜோதி சவான், ஸ்ரீ கிருஷ்ணா ஜா, பல்லையா குண்டு, அக்கலால் கனோஜியா, ராஜேந்திர கவனே மற்றும் நன்ஹெலால் குப்தா ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய தானே காவல்துறை செய்தித் தொடர்பாளர், ''9 பேரும் நிர்மல் பாரத் அபியான் மூலம் 2015-ல் கழிப்பறை கட்ட விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு தலா ரூ.6,000 வீதம் ரூ.54,000 ஒதுக்கப்பட்டது.

பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள் இரண்டு ஆண்டுகளாக கழிப்பறை கட்டவில்லை. அந்தப் பணத்தை சொந்தக் காரணங்களுக்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நார்போலி காவல்நிலையத்தில் 420 மற்றும் 406 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x