Published : 31 Oct 2014 12:53 PM
Last Updated : 31 Oct 2014 12:53 PM

30 சதவீத எரிவாயுவை மிச்சப்படுத்தும் ‘இகோ குக்கர்’: ஓட்டல்கள், விடுதிகளுக்கு பயன்படும்

நாட்டின் 30 சதவிகித எரிசக்தி, மரபுசாரா சமையலுக்குச் செலவாகி விடுகிறது. இதனால் சமையல் எரிவாயுவின் (எல்பிஜி) பயன்பாட்டைக் குறைப்பது அவசியமாகிறது.

சமூக நல விடுதிகள், பள்ளிகள், ஓட்டல்கள் போன்றவற்றில் அதிக அளவில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனை இலக்காக முன்வைத்து, ஆந்திரப் பிரதேசத்தின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிக் கழகம் (என்ஆர்இடிசிஏபி), சமீபத்தில் சுற்றுச்சூழல் குக்கர் (இகோ குக்கர்) பயன்பாட்டின் செயல் முறை விளக்கத்தை, சமூகநல ஆண்கள் விடுதியில் நடத்திக் காட்டியது.

சுற்றுச்சூழல் குக்கர், சமையல் எரிவாயு பயன்பாட்டை 70 சதவிகிதம் வரை குறைக்கும் என்று உறுதியளிக்கப்படுகிறது.

இகோ சென்ஸ் தனியார் நிறுவனத்தின் தயாரிப்புப் பொருளான இது, மற்ற மரபுசாரா உபரகணங்கள் போல் இல்லா மல் சுற்றிலும் காற்றுப்புகாத வகையில் அடைக்கப்பட்டு, நீராவி யைத் (மற்றும் வெப்பம்) தக்கவைக்கிறது.

இந்தக் கருவியில் உள்ள ரெகு லேட்டர், எரிவாயுவை வெளியிட்டு, சமச்சீரான 72 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைப் பராமரிக்கிறது. குறைந்த நெருப் புடைய பர்னரால் எரிவாயு, சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. ‘‘இது குறைந்த எரிவாயு உபயோகத்துக்காக மட்டுமில்லா மல், ஊட்டச்சத்து மதிப்பைப் பாதுகாத்து உணவின் ருசியையும் அதிகரிக்கிறது” என்கிறார் என்ஆர்இடிசிஏபி மாவட்ட மேலாளர் சி.பி. ஜெகதீஸ்வர ரெட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x