

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது ஷு வீசிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை ஒட்டி அம்மாநிலத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று சாலையோரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ராகுல் மீது ஹாரியோம் சர்மா என்ற இளைஞர் ஷு வை வீசினார். ஏனெனினும் இந்த தாக்குதலிருந்து ராகுல் காந்தி தப்பினார். இதனையடுத்து அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.