

ஐஃபா உற்சவம் நிறைவு விழா வில் ‘ஜனதா கேரேஜ்’ தெலுங்கு படத்துக்கு 6 விருதுகள் கிடைத் தன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளுக்கான திரைப் பட விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடந்தது. 2 நாட் கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் நிகழ்ச்சியில் 2016-ம் ஆண்டில் வெளியான தமிழ், மலையாள படங் களுக்கான விருதுகள் வழங்கப் பட்டன. இரண்டாவது நாளான நேற்று முன்தினம் தெலுங்கு, கன்னட மொழிப் படங் களுக்கான விருதுகள் வழங்கப் பட்டன.
இதில் தெலுங்கில் கொரட்டால சிவா இயக்கத்தில் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ‘ஜனதா கேரேஜ்’ திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், நாயகன், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆகிய ஆறு பிரிவுகளில் விருது பெற்றது. ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ சிறந்த படம், ஹீரோ, இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் ஆகிய 5 பிரிவுகளில் விருதுகளை பெற்றது.
‘யு டர்ன்’ கன்னட படத்துக்காக இயக்குநர் பவன்குமார் சிறந்த கதை, சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருது பெற்றார். ‘அ.. ஆ’ தெலுங்கு படத்துக்காக சமந்தா, சிறந்த நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் ராகவேந்திர ராவ், வெங்க டேஷ், நாகார்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர், ரகுல் ப்ரீத் சிங், ஸ்ரேயா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.