பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும்: அரசுக்கு அஜ்மீர் தர்கா தலைவர் வலியுறுத்தல்

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும்: அரசுக்கு அஜ்மீர் தர்கா தலைவர் வலியுறுத்தல்
Updated on
1 min read

பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்குமாறு அஜ்மீர் தர்காவின் ஆன்மீகத் தலைவர், மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். நாட்டில் மத நல்லிணக்கம் மலர இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அஜ்மீரில் நடைபெற்ற விழாவொன்றில் பேசிய தர்கா தீவான் ஜெய்னுல் ஆபுதீன் அலி கான், ''பசு உள்ளிட்ட விலங்குகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும். நாட்டில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் பசு வதைக்கு எதிரான முன்னெடுப்பைத் தொடங்க வேண்டும். மாட்டிறைச்சி உண்ணக்கூடாது. இதன்மூலம் நாட்டுக்கு நல்ல செய்தியை விதைக்க வேண்டும்.

இப்போதில் இருந்து நானும் எனது குடும்பத்தினரும் மாட்டிறைச்சி உண்ண மாட்டோம். மத்திய அரசு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

இனவாத வெறுப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பசு உள்ளிட்ட விலங்குகள் வதையும், மாட்டிறைச்சி விற்பனையும் நிறுத்தப்பட வேண்டும்.

குஜராத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை, கடத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளதை வரவேற்கிறேன்.

பசுக்கள் மத நம்பிக்கையின் அடையாளம். அரசு மட்டுமல்லாது, மதங்களைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் அவற்றைப் பாதுகாப்பதைத் தனது கடமையாகக் கருத வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in