பிலாவல் புட்டோவுக்கு நாய் பொம்மை பரிசளித்த கோவா காங்கிரஸ் பிரமுகர்

பிலாவல் புட்டோவுக்கு நாய் பொம்மை பரிசளித்த கோவா காங்கிரஸ் பிரமுகர்
Updated on
1 min read

காஷ்மீர் குறித்து தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் பிலாவல் புட்டோவுக்கு கோவா காங்கிரஸ் அமைப்பு செயலாளர் நாய் பொம்மையை பரிசாக அனுப்பி உள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ அரசியல் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றபோது, இந்தியாவிடமிருந்து காஷ்மீரை ஒரு அங்குலம் கூட விட்டுவிடாமல் கைப்பற்றுவேன் என்று கூறி இருந்தார். பாகிஸ்தான் அரசியலில் புதிதாக களம் இறங்கியுள்ள பிலாவல் புட்டோ தொடர்ந்து காஷ்மீர் குறித்து சர்ச்சையான வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இது தொடர்பாக கோவா காங்கிரஸ் அமைப்பு செயலாளரான துர்கா தாஸ் கமாத் கூறும்போது, "பிலாவல் புட்டோவுக்கு குரைக்கும் நாய் பொம்மையை பரிசாக அனுப்பி உள்ளேன். அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கியது முதலே காஷ்மீர் குறித்து சர்ச்சையாக பேசி வருகிறார். அவரது பேச்சு நாய் வளர்ந்து நிற்கும் மரத்தை பார்த்து தொடர்ந்து காரணம் ஏதும் இல்லாமல் குரைப்பது போல உள்ளது.

பாகிஸ்தானில் தனது அரசியல் அத்தியாயத்தை தொடங்குவதற்காக காஷ்மீர் மீது துப்பாக்கி முனையை வைக்க பிலாவல் நினைக்க கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த குரைக்கும் நாய் பொம்மை பரிசு, தொடந்து குரைத்துக் கொண்டே இருக்கும் நாய் யாரையும் கடிக்காது என்பதை பிலாவலுக்கு உணர்த்தட்டும் என்றும் துர்கா தாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in