தெஹல்கா ஆசிரியர் ஷோமா சவுத்ரியிடம் போலீஸ் விசாரணை

தெஹல்கா ஆசிரியர் ஷோமா சவுத்ரியிடம் போலீஸ் விசாரணை
Updated on
1 min read

தெஹல்கா இதழ் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது, பெண் பத்திரிக்கையாளார் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கோவா போலீசார் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சாமு டவேரஸ் தலைமியிலான 4 பேர் கொண்ட போலீஸ் குழு டெல்லி வந்துள்ளது.

அக்குழுவினர், இன்று தெஹல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரியிடம் விசாரணை மேற்கொண்டனர். 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் தெஹல்கா அலுவலகத்தில் இருந்து சில லேப்டாப்கள், ஐ பேட் போன்றவற்றை கைப்பற்றி ஆய்வு செய்ய இருப்பதாக கோவா போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தெஹல்கா இதழ் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது, பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ள பெண் பத்திரிக்கையாளார், தி ஹிந்துவிடம் பேசுகையில், தன்னையும் தன் குடும்பத்தையும் அச்சுறுத்தி, பணிய வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள தருண் தேஜ்பாலை போலீசார் இதுவரை அணுகி விசாரணை ஏதும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in