

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர் களின் வசதிக்காக, செல்போன் செயலியை யுகாதி பண்டிகையான நேற்று திருமலை திருப்பதி தேவஸ் தானம் அறிமுகம் செய்தது.
‘கோவிந்தா திருமலா திருப்பதி தேவஸ்தானம்’ என்ற இந்த செயலியின் பெயர், பக்தர்கள் வழங்கிய பரிந்துரை பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. பக்தர்கள் இந்த செயலியை தங்களது செல் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் தரிசனம், தங்கும் அறைகள் முன்பதிவு உள்ளிட்ட பல வசதிகளை எளிதாகப் பெறலாம்.
இதுவரை ஆன்லைன் மூலம் 1.33 கோடி பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை பெற்று சுவாமியை தரிசித்துள்ளனர். தினமும் 2000 அறைகள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.