

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வழக்கம்போல் தனது பட்ஜெட் உரையில் இன்றும் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டினார்.
மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்று, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போதெல்லாம், ப.சிதம்பரம் தனது உரையின் முடிவில் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில், மக்களவையில் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர்,
'வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்'
என்ற திருக்குறளைச் சொல்லி, அதன் அர்த்தத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறினார், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அல்ல. அவரின் நேர்மையான ஆட்சியே ஆகும். அதுவும், தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும் என்பதே சிதம்பரம் சொன்ன குறளின் பொருள்.