

நான்சி என்ற 4 வயது சிறுமியை சந்திக்க காரை நிறுத்திய மோடி, அவருடன் சில வார்த்தைகள் பேசிய பிறகே புறப்பட்டுச் சென்றார்.
சூரத் நகரில் திங்கட்கிழமை விமான நிலையம் நோக்கி பிரதமர் காரில் செல்லும்போது, திரளான மக்கள் மத்தியில் நான்சி என்ற 4 வயது சிறுமி அவரது கவனத்தை ஈர்த்தார்.
தனது காரை நோக்கி அச்சிறுமி தயக்கத்துடன் முன்னேறும்போது, பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்துவதை பிரதமர் கண்டார்.
உடனே காரை நிறுத்தச் சொன்ன பிரதமர், சிறுமியை அழைத்துவரச் சொன்னார். காரிலிருந்து இறங்கி சிறுமியிடம் சில வார்த்தைகள் பேசிய பிரதமர், பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சிறுமியுடன் பிரதமர் பேதும்போது அங்கிருந்த மக்கள், 'மோடி, மோடி' என உற்சாக குரல் எழுப்பினர்.
பிரதமர் இதற்கு முன் பலமுறை பாதுகாப்பு வளையத்தை மீறி இதுபோல் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.