

பாகுபலி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இத்திரைப்படத்தின் திருட்டு சிடிக்கள் தற்போது வெளிவரத் தொடங்கியிருப்பது படக்குழுவி னரை அதிர்ச்சி அடைய வைத்துள் ளது. இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆந்திரா போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விஜயவாடா, குண்டூர், பிரகாசம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் போலீஸார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்காக தயாராக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான திருட்டு சிடிக்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு சிடி விற்பனையில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர்.