Last Updated : 09 Jul, 2016 03:22 PM

 

Published : 09 Jul 2016 03:22 PM
Last Updated : 09 Jul 2016 03:22 PM

படையினரால் ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றத்தால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி உட்பட 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர், இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரின் தெற்கு பள்ளத்தாக்கு பகுதியான அனந்தநாக் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி உட்பட மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவரை பல காலமாக பாதுகாப்புப் படையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம் ஆள் சேர்த்தவர்:

சுட்டுப் கொல்லபட்ட புர்ஹான் வானி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமண்டோவாக இருந்து வந்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ந்து வந்துள்ளார். அவர் மீது நாச வேலைகளில் ஈடுப்பட்டதாக பல வழக்குகள் உள்ளன. புர்ஹான் வானி பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புர்ஹான் வானி பாகாப்புப் படை வீரர்களால் கொல்லப்பட்டிருகிறார்.

புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரின் பாரமுல்லா பகுதியிலிருந்து பனிஹால் வரை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் அமர்நாத் பயணம் இன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் பள்ளிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அசபாவிதங்களைத் தடுக்க காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x