

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்ப ட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தத் தவறிய மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ள ராம் ஜேத்மலானியின் மனுவை வரும் பிப்ரவரி 19-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு அருகே உள்ள லீக்டென்ஸ்டைன் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்தி ருக்கும் இந்தியர்களின் பட்டியல் மற்றும் இது தொடர்பான விசாரணையும் முழுமையாக அல்லது பகுதியாகத் தொடர்புடை யவர்களின் பட்டியலையும் மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். யாருக்கெல்லாம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது, எவ்வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கை துரிதகதியில் விசாரிக்கக் கோரிய ஜெத்மலானி நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு மதிக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டியி ருந்தார். இது தொடர்பான மனு, நீதிபதி கள் எச்.எல். தத்து, ஆர்.பி. தேசாய், எம்.பி. லோகுர் ஆகியோரடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
“இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதை நீதி மன்றம் உணர்ந்திருக்கிறது. இவ் வழக்கு வரும் ஏப்ரல் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்படும்” என்றனர். -பி.டி.ஐ.