

இந்திய எல்லையில் போதைப் பொருள் கடத்த முயன்ற பாகிஸ்தானியர்கள் 3 பேரை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து, 120 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள், ஒரு ஏ.கே-47 ரக துப்பாக்கி மற்றும் 2 பிஸ்டல்களும் சொற்ப அளவில் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் முல்லாபூர் என்ற கிராமத்தில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் மூன்று பேர் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டதைக் கண்டனர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் கடத்தல்காரரர்கள் மூவரையும் எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட 3 கடத்தல்காரர்களுக்கும் 25.ல் இருந்து 30 வயதுக்குள் இருக்கும் என தெரிகிறது.