

தமிழக விவகாரத்தில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறும் போது, “சசிகலாவுக்கு விசா ரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பது வரவேற்கத் தக்கது. அதேநேரம், தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை பாஜகவும் மோடி அரசும் நிறுத்திக் கொள்ள வேண் டும். அரசியலமைப்புச் சட்ட விதி களின்படி ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். எஸ்.ஆர்.பொம்மை வழக்கு தீர்ப்பின் அடிப்படையில், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தைக் கூட்டி இரு தரப்பினரை யும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என்றார்.