

காஷ்மீர் பகுதியில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பிய தைத் தொடர்ந்து, அனந்த்நாக் மாவட்டம் தவிர இதர பகுதி களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. ஆனால், குல்காம் மாவட்டத்தை நோக்கி பேரணியாக செல்ல, பிரிவினை வாதிகள் அழைப்பு விடுத்திருந்த னர். இதனைத் தடுக்க நேற்று முன்தினம் மீண்டும் சில பகுதிக ளில் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனிடையே, நேற்று இயல்பு நிலை நிலவியதால், அனந்த் நாக் தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த் தப்பட்டது. மொபைல் சேவை கள் மீண்டும் தொடங்கப்பட்டுள் ளது. அதே நேரம் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.