

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிமி அமைப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் பயங்கரவாத செயல்களுக்கு பண உதவி அளிப்பது, திட்டங்கள் தீட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகர காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் பட் கூறுகையில்: பயங்கவாத சம்பவங்களுக்கு இந்த அமைப்பினர் தொடர்பில் உள்ளதாக சந்தேகம் எழந்ததால் 5 பேரையும் கைது செய்துள்ளோம். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
ஷேக் அஜீஸ் உல்லா (36), மொஇனுதீன் குரேஷி (37), ஷேக் ஹபிபுல்லா (33), ஹயாத் நூர் கான், ரோஷன் குலாம் ஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து, சிமி அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை படிவங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.