சிக்கல் இன்னும் முடியவில்லை: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

சிக்கல் இன்னும் முடியவில்லை: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி
Updated on
1 min read

உச்ச நீதிமன்றம் ஜெயலலி தாவுக்கு விதிக்கப்பட்ட தண்ட னைக்கு இடைக்கால தடை தான் விதித்திருக்கிறது. நிபந்தனை ஜாமீன் மட்டுமே வழங்கப் பட்டிருக்கிறது. அதனால் ஜெய லலிதாவுக்கு இன்னும் சிக்கல் முடியவில்லை என்பதை மறந்து விட வேண்டாம் என பாஜக மூத்த‌ தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கின் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் நீதிபதி கள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்நிலையில் ‘தி இந்து' சார்பாக அவரிடம் பேசிய போது, “இவ்வழக்கில் ஜெய லலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் நான் மதிக்கக்கூடியவர். அவர் ஜெயலலிதாவின் உடலில் உள்ள நோய்களை பற்றி எடுத்துக்கூறி ஜாமீன் கேட்டார். அதனால் நான் அதிகமாக ஆட்சேபிக்கவில்லை.

எனவேதான் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இருக்கிறது. தண்டனைக்கும் இடைக்காலத் தடை மட்டுமே விதித்திருக்கிறது. அவர் வீட்டை விட்டு எங்கும் போக கூடாது. கட்சிக்காரர்களை சந்திக்ககூடாது. அரசியல் செய்ய கூடாது. மேல் முறையீட்டில் வாய்தா வாங்கக்கூடாது. டிசம்பர் 18-ம் தேதிக்குள் வழக்கை நடத்த வேண்டும். ஒரே ஒரு நாள் தாமதித்தால் கூட ஜாமீன் தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள் கண்டிப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த ஜாமீன் காலத்தில் சுப்பிரமணியன் சுவாமியையோ, நீதிபதியையோ அசிங்கமாக பேசக்கூடாது. கார்ட்டூன் போடக் கூடாது. வீடு மீதோ, ஆட்கள் மீதோ தாக்குதல் நடத்தக் கூடாது. மீறி ஏதாவது நடந்தால் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் இல்லாமல் போய்விடும் என நீதிபதிகளே கூறி இருக்கிறார்கள்.

அவருடைய கட்சிக்காரர்கள் வ‌ன்முறையில் ஈடுபடக் கூடாது. அதனை ஜெயலலிதா தடுக்க வேண்டும். நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அருவருப்பாக பேசக்கூடாது. தமிழ்நாட்டில் மீண்டும் சட்டம் ஒழுங்கை கெடுத்தால் அவருக்குத்தான் பிரச்சினையாக முடியும்.

35 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங் களை மொழிபெயர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 18-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மேல் முறையீட்டில் தேவைப்பட்டால் நான் ஆஜராவேன். அங்கு ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தவோ, அல்லது விடுதலை ஆகவோ வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் நான்காண்டு சிறை தண்டனை ஏழாண்டாக கூட மாற வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஜெயலலிதாவுக்கு சிக்கல் இன்னும் முடிந்துவிடவில்லை. இதனை யாரும் மறந்துவிடக் கூடாது''என்றார்.

ட்விட்டரில் விமர்சனம்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிமுகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.அதில் அதிமுகவினரை பொறுக்கிகள் என குறிப்பிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in