Last Updated : 18 Oct, 2014 10:27 AM

 

Published : 18 Oct 2014 10:27 AM
Last Updated : 18 Oct 2014 10:27 AM

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த பரபரப்பான நிமிடங்கள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசார ணைக்கு வந்தது. அப்போதைய பரபரப்பான நிமிடங்கள் வருமாறு:

காலை 10: உச்ச நீதிமன்றத்தின் வாயில் கதவுகள் திறக்கப்பட்டு பார்வை யாளர்கள் அனுமதிக்கப் பட்டனர். முன்னதாக இரண்டு இடங்களில் தீவிர‌ சோதனை மேற்கொள்ளப்பட்டது. வழக்கத்தைவிடவும் நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஜெயலலிதாவின் வழக்கு கர்நா டகத்தில் நடைபெற்றபோது அதிமுக வினர் பெருந்திரளாக பெங்க ளூரில் திரண்டனர். ஆனால் கட்சி மேலிட உத்தரவின் காரணமாக உச்ச நீதிமன்ற வளாகத்தில் அதிமுக முக்கிய பிரமுகர்கள் மட்டுமே காணப்பட்டனர்.

காலை 10.25: ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறை நிரம்பி வழிந்தது. 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் களும்,100-க்கும் மேற்பட்ட பத்திரிகை யாளர்களும் நெரிசலில் நின்று கொண்டிருந்தனர்.

காலை 10.30: ஜெயலலிதா மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற‌ தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி. லோகூர், ஏ.பி.சிக்ரி அடங்கிய அமர்வு இருக்கையில் அமர்ந்தது.

காலை 10.32: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கறுப்புப் பண வழக்கில் ஆஜராகி வாதிட்டார்.

காலை 10.40: ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் நீதிமன்றத்துக்கு வந்தார். அவருடன் சொத்துக்குவிப்பு வழக்கை தொடக்கம் முதலே கவனிக்கும் வழக்கறிஞர்கள் பி.குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், பரணிகுமார், பன்னீர் செல்வம், செல்வகுமார் ஆகியோர் கோப்புகளுடன் வந்தனர்.

காலை 10.45: சொத்துக்குவிப்பு வழக்கின் மனுதாரரும்,பாஜகவின் மூத்த தலைவருமான‌ சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனுடன் அவர் கைகுலுக்கினார்.

காலை 10.48: முன்னாள் மத்திய அமைச்சரும் வழக்கறிஞருமான‌ கபில் சிபல் வேறு வழக்கிற்காக நீதிமன்றத்துக்கு வந்தார். சிறிது நேரத்தில் மற்றொரு முன்னாள் அமைச்சர் மணீஷ் திவாரியும் நீதிமன்றத்துக்கு வந்தார்.

‘என்ன இவ்வளவு கூட்டம்?'என அதிர்ச்சியாக கேட்டுவிட்டு இருவரும் வெளியேறினர்.

காலை 11: ஜெயலலிதாவின் ஜாமீன் மனு வரிசை எண்படி 65-வது வழக்காக இருந்ததால் அன்றைய தினம் விசாரிக்கப்பட வேண்டிய 20 முதல் 45-வது எண் வரையிலான வழக்குகளின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன. பல வழக்குக‌ளில் ஆஜராக வேண் டிய வழக்கறிஞர்களால் உரிய நேரத் தில் நீதிமன்றத்துக்குள் நுழைய முடிய வில்லை.

காலை 11.15: ஜெயலலிதாவின் வழக்கு விசாரணையை பார்ப்பதற்காக நூற்றுக் கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குவிந் தனர். இதனால் வயதான வழக்கறி ஞர்களும் பெண் வழக்கறிஞர்களும் நெரிசலில் சிக்கி தடுமாறினர். பலர் பேசிக் கொண்டே இருந்ததால் தலை மை நீதிபதி எச்.எல்.தத்து கடும் கண்ட னம் தெரிவித்தார்.

காலை 11.18: சசிகலா, சுதாகரன், இளவரசியின் சார்பாக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் கே.டி.எஸ்.துளசி, சுஷில் குமார் உள்ளிட்டோர் வந்தனர்.

காலை 11.30: 50-வது வழக்கு முதல் 62-வது வழக்கு வரையிலான வழக்குகளின் வழக்கறிஞர்கள் நீதிமன் றத்துக்கு வராததால் விசாரணை நடைபெறவில்லை.

காலை 11.38 மணி: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் தனது வாதத்தை தொடங்கினார்.

காலை 11.40 : ‘ஜெயலலிதாவின் வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் தவறு இழைத்துவிட்டது. எங்களுடைய தரப்பு சார்பில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை நிறுத்த கோரவில்லை. இருப்பினும் ஜாமீன் மனுவை ரத்து செய்து விட்டது, குற்றவாளிகள் தரப்பு தாக்கல் செய்த பல்வேறு நியாயமான ஆவணங்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. ஜெய லலிதாவின் பல்வேறு வருமானங் களையும் பரிசீலிக்கவில்லை. ஜெய லலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கலாம்’ என நாரிமன் தனது வாதத்தை முடித்தார்.

மதியம் 12: சசிகலாவின் வழக்கறிஞர் துளசியும் சுஷில்குமாரும் ஜெயலலி தாவுக்காக மூத்த வழக்கறிஞர் நாரிமன் என்ன வாதத்தை முன் வைத்தாரோ, அதனையே தங்களது தரப்பு வாத மாகவும் ஏற்றுக்கொள்ளுமாறு கோரினர்.

மதியம் 12.05: சுப்பிரமணியன் சுவாமி தனது வாதத்தை தொடங்கினார். ஜெய லலிதாவிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பதற்கு பல காரணங்களை முன் வைத்தார்.

மதியம் 12.10: ‘ஒருவேளை தண்ட னையை நிறுத்திவைத்து ஜாமீன் கொடுத்தால் எப்போது வழக்கை முடிப்பீர்கள். அதற்கும் இரண்டு தலை முறை கால அவகாசம் எடுத்துக் கொள்வீர்களா?' என்று ஜெய லலிதாவின் வழக்கறிஞர் நாரிமனிடம் தலைமை நீதிபதி தத்து கேட்டார்.

மதியம் 12.12: ‘கால தாமதம் ஆகாது. ஆறு வாரங்களில் ஆவணங்களை தாக்கல் செய்து 3 மாதங்களில் மேல் முறையீட்டு வழக்கை நடத்துவோம்' என்றார் நாரிமன்.

மதியம் 12.15: சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்த வாதத்தில், அதிமுகவினர் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ளதாகவும் கூறினார்.

‘குறிப்பிட்ட தினத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாரிமன் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது டிசம்பர் 18-ம் தேதி கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என தலைமை நீதிபதி கண்டிப்புடன் கூறினார்.

மதியம் 12.21: ‘ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் டிசம்பர் 18-ம் தேதி வரை தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்குகிறோம்’ என்று தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

மதியம் 12.23: நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்த ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனுக்கு நன்றி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சுஷில்குமார், துளசி ஆகியோருக்கும் நன்றி கூறினர். வழக்கறிஞர்கள் பி.குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், பரணிகுமார், பன்னீர் செல்வம், செல்வகுமார், திவாகரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x