

தெலங்கானாவில் மாவோயிஸ்ட் கள் நடமாட்டம் அதிகரித் திருப்பதால் மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட் தீவிரவாதி களால் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் உயி ருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அம்மாநிலத்தின் கம்மம், வாரங்கல், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் சமீப காலங்களாக மாவோயிஸ்ட் களின் நடமாட்டம் அதிகரித் திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாது காப்புக்காக ஏ.கே.47 ரக துப்பாக்கி ஏந்திய 3 கமாண் டோக்கள் கூடுதலாக நிய மிக்கப்பட்டுள்ளனர். அவரது வாகன அணிவகுப்பு வரிசை யிலும் கூடுதலாக 2 குண்டு துளைக்காத கார்கள் இடம் பெற்றுள்ளன.