Last Updated : 16 Sep, 2016 08:44 AM

 

Published : 16 Sep 2016 08:44 AM
Last Updated : 16 Sep 2016 08:44 AM

ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்தக் கூடாது: புதிய விதிகள் அரசாணையாக வெளியீடு

ஆதார் அட்டை தகவல்கள் எதற்காக பயன்படுத்தப்படு கின்றன என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், அந்தத் தகவல் களை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஆதார் சட்டத் தில் புதிய விதிகள் சேர்க்கப்பட் டுள்ளன. அவை நேற்றுமுன் தினம் அரசாணையாக வெளி யிடப்பட்டன.

கடந்த மார்ச் 16-ம் தேதி ஆதார் மசோதா நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப் பட்டு சட்டமானது. இதைத் தொடர்ந்து மார்ச் 26-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஆதார் சட்ட விதிகளை மீறுவோருக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் விதிகள் உள்ளன.

எனினும் ஆதார் அட்டை திட்டத்தில் குளறுபடிகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். ஆதார் அட்டைக்காக பெறப்பட்ட தகவல்கள் வேறு அமைப்பு களுக்கு கைமாறும் வாய்ப் புள்ளது. தனிநபர்களின் அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வரும் ஆபத்துள்ளது என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்தக் குறைகளைப் போக்கும் ஆதார் சட்டத்தில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டு நேற்றுமுன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி அரசு, தனியார் அமைப்புகள் பொதுமக்களின் ஆதார் தகவல்களைப் பெறும்போது சம்பந்தப்பட்ட நபர்களின் ஒப்புதலை கண்டிப்பாகப் பெற வேண்டும்.

அந்த தகவல்கள் எதற் காகப் பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறித்து அட்டைதாரரிடம் விளக்கம் அளிக்க வேண்டும். வேறு எந்த பணிக்கும் அந்த தகவல்களைப் பயன்படுத்தக்கூடாது என்று புதிய விதிகளில் கூறப்பட் டுள்ளது.

‘ஆதார் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதை தடுப்பது, பொது மக்களின் அந்தரங்கத் தைப் பாதுகாப்பது ஆகிய வற்றின் அடிப்படையில் புதிய விதிகள் வரையறுக்கப் பட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஏதுவாக புகார் மையம் தொடங்கப்படும்’ என்று ஒருங்கிணைந்த அடையாள திட்ட ஆணைய (யு.ஐ.டி.ஏ.ஐ.) தலைமை நிர்வாக அதிகாரி அஜய்பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x