

பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த வாரம் இந்தி மொழி அறிவுஜீவிகளின் கூட்டத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் நடத்தியுள்ளார். இது வரும் 2019 மக்களவை தேர்தலுக்காக அரசியல் ஆதரவு திரட்டும் முன் னேற்பாடாகக் கருதப்படுகிறது.
மத்திய அரசுக்கு சகிப்புத் தன்மை இல்லை என கடந்த ஆண்டு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையொட்டி சாகித்ய அகாடமி விருது பெற்ற அறிஞர் கள் பலர் தங்கள் விருதுகளை திரும்பி ஒப்படைக்கத் தொடங்கி னர். இந்த விவகாரத்தை பிஹார் தேர்தலில் பயன்படுத்திய நிதிஷ் குமார் அதில் வெற்றியும் பெற்றார்.
அடுத்து, 2019-ல் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் அவர் பேசப் பட்டார். இந்நிலையில் பாட்னாவில் கடந்த வாரம் இந்தி மொழி அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நிதிஷ்குமார் நடத்தி னார். சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்த இந்தி அறிஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் கூறும்போது, “இந்தி மொழி அறிஞர்களை ஆங்கிலம் பேசும் அறிஞர்கள் தங்களுடன் சேர்ப்ப தில்லை. எனவே இவர்களை தனியாக ஒருங்கிணைத்து அரசியல் லாபம் பெற நிதிஷுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தி மொழி அறிஞர்களின் ஆதரவால் நிதிஷின் பெயர், தேசிய அரசிய லில் வளரும். மக்களவை தேர்தலின் முன்னோட்டமாக இது போன்ற கூட்டங்களை மேலும் பல மாநிலங்களில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாய், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த் ஜா, யுபிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் புருஷோத்தம் அகர்வால், முன் னாள் பத்திரிகை ஆசிரியரும் ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளரு மான ஓம் தான்வி மற்றும் இடதுசாரி சிந்தனை கொண்ட அறிஞர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பொதுவான சமூகப் பிரச் சினைகள் மற்றும் இந்தி மொழி வளர்ச்சி குறித்து மட்டும் அக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எனினும், இந்த அறிஞர்களின் ஆதரவை அடுத்த மூன்று ஆண்டுகளில் பாஜகவுக்கு எதிராக நிதிஷ் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.