சிந்து நதிநீர் ஒப்பந்தம்: 20, 21-ல் இந்தியா, பாகிஸ்தான் பேச்சு

சிந்து நதிநீர் ஒப்பந்தம்: 20, 21-ல் இந்தியா, பாகிஸ்தான் பேச்சு
Updated on
1 min read

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தியா, பாகிஸ்தான் இடையே லாகூரில் மார்ச் 20, 21 ஆகிய தேதிகளில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

உரி ராணுவ முகாம் மீதான பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி களின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தி வைத்தது.

ஆனால் சிந்து நதிநீர் ஒப்பந்தம், 1960-ன்படி குறைந்தபட்சம் நிதி யாண்டுக்கு ஒருமுறை இரு நாடு களும் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டாயம் ஆகும். இந்நிலையில் சிந்து நிரந்தர ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வருடாந்திர கூட்டத்துக்கான இந்தியப் பிரதிநிதிகளான, இந்தியா வின் சிந்து நதிநீர் ஆணையர் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

சிந்து நிரந்தர ஆணையத்தின் கூட்டம் இதற்கு முன் கடந்த 2015, மே மாதம் நடைபெற்றது. உரி தாக்கு தல் உட்பட பாகிஸ்தான் தீவிரவாதி களின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந் தத்தை ஆய்வு செய்வதற்கான கூட்டம் பிரதமர் மோடி தலைமை யில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது ஒப்பந் தத்தில் இந்தியாவுக்குள்ள உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்வது (கூடுதல் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்வது) என முடிவு செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in