

காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டார்.
இதையடுத்து அங்கு வன் முறை வெடித்தது. இதைக் கட்டுப் படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சிலர் இறந்ததைக் கண்டித்து, பிரிவினை வாத அமைப்புகள் தொடர்ந்து வன் முறை, போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால் ஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருந்தது. வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், போக்குவரத்து என அனைத்தும் முடங்கின. சுமார் 80 நாட்களாக நீடித்த இந்தப் போராட்டம் காரணமாக 2 போலீஸார் உட்பட 82 பேர் பலியாகி உள்ளனர்.
இப்போது நிலைமை சீரடைந் திருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டது. வன்முறை சம்பவங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் 2-வது நாளாக நேற்று ஊரடங்கு அமலில் இல்லை.