Published : 15 Oct 2013 01:33 PM
Last Updated : 15 Oct 2013 01:33 PM

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை: பிரதமர்

இலங்​கை​யில் அடுத்த மாதம் காமன்​வெல்த் நாடு​கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இந்​தியா புறக்கணிக்க வேண்​டும் என்​பதை வலி​யு​றுத்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு கடந்த 1ம் தேதி முதல் உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் மேற்​கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பிர​த​மர் மன்​மோ​கன் சிங்கை நேற்று சந்​தித்த திமுக நாடா​ளு​மன்​றக் குழு தலை​வர் டி.ஆர்.பாலு ,நவம்​பர் மாதம் இலங்​கை​யில் நடை​பெ​ற​வுள்ள காமன்​வெல்த் நாடு​கள் மாநாட்​டில் இந்​தியா கலந்​துக்​கொள்​ளக் கூடாது என்ற கோரிக்​கையை திமுக தலை​வர் கரு​ணா​நிதி சார்​பில் வற்​பு​றுத்​திக் கேட்​டுக்​கொண்​டார்.​

இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு கடந்த 1ம் தேதி முதல் உண்​ணா​வி​ர​தம் இருந்து வருவதையும் எடுத்துரைத்தார்.

அப்​போது கரு​ணா​நி​திக்கு, பிர​த​மர் கடி​தம் அளித்தார். அந்த கடிதத்தில்: “காமன்​வெல்த் மாநாட்​டில் பங்​கேற்​பது குறித்து தமிழ் மக்​களின் உணர்​வு​களை மதித்து நல்ல முடி​வு​ எடுக்கப்படும் என்றும், ​தியாகு உண்​ணா​வி​ர​தத்​தைக் கைவிட வேண்​டிய நட​வ​டிக்​கை​களை தி.மு.க. தலை​வர் கரு​ணா​நிதி தலையிட்டு எடுக்க வேண்​டும்” எனவும் பிர​த​மர் கேட்​டுக்​கொண்​டுள்​ளார்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x