

பெல்ஜியம் சென்றிருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் கடந்த 30-ம் தேதி உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இதனால் பெரும் துயரத்தில் இருந்த சித்தராமையா கண்ணீர் சிந்தி அழுதார்.
அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகின. இந் நிலையில் ரெய்ச்சூர் மாவட்டம் சாந்தேகுல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் (25) என்பவர் சித்தராமையாவை கேலி செய்யும் வகையில் அவதூறான வாசகங் களை இணைத்து வாட்ஸ் அப்பில் தனது நண்பர்களுக்கு அனுப்பி னார்.
இந்தப் புகைப்படத்தை ஷரவணபசவா (26) என்பவர் தனது குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரெய்ச்சூரை சேர்ந்த கடயப்பா கவுடா (24) என்பவர் முழு ஆதாரங் களுடன் போலீஸில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் முதல்வர் சித்தராமையாவை கேலி செய்து அவதூறான வகையில் புகைப்படம் மற்றும் செய்தியை அனுப்பிய இரு இளைஞர்கள் மீதும் ரெய்ச்சூர் போலீஸ் நேற்று 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான நவீன், ஷரவணபசவா இருவரையும் தேடி வருகின்றனர்.