

பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது, வெளியிடப்பட்ட இந்தியா-அமெரிக்க கூட்டறிக்கையை விமர்சித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகின் எந்த பகுதியிலும் ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடிய அமெரிக்க அத்துமீறலுக்கு உதவும் வகையில், அமெரிக்க விமானங்களுக்கு எரி பொருள் நிரப்பித் தருவது உள்ளிட்ட வசதிகளை இந்தியா செய்துகொடுப்ப தாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேற்கு ஆசியப் பகுதிகளில் வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதி யில் அமெரிக்கா அல்லது ‘நேட்டோ’ படையினர் தாக்குதல் நடத்துவதை இந்தியா ஆதரிப்பதாகவே இது அமைந்துவிடும்.
இந்த கூட்டறிக்கை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் பாதக மான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. மேற்கு ஆசியா மற்றும் வளை குடா பகுதியில் நமது நட்பு நாடுகள் உடனான பரஸ்பர ஒத்துழைப்புக்கு இந்த கூட்டறிக்கை கேடு விளைவிக்கும்.
பல விவகாரங்களை, நாடாளு மன்றத்தில் விவாதிக்காமலேயை நரேந்திர மோடி அரசு முடிவெடுத்து விட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.