

இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் நெடுத்தீவைச் சேர்ந்தவர்கள் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக மீன்வளத் துறை இணை இயக்குநர் அமலா சேவியர் இன்று (புதன்கிழமை) கூறும்போது, "இந்திய கடற் எல்லையில் மீன்பிடித்ததாக இலங்கை நெடுத்தீவைச் சேர்ந்த 10 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்படை அதிகாரிகளால் நாகப்பட்டினம் அழைத்து செல்லப்பட்டு பின் அங்கிருந்து காரைக்கால் அழைத்து செல்லப்பட்டனர்" என்றார்.