

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரை ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு முதல் வர் சந்திரபாபு நாயுடு அடுத்த மாதம் ஜப்பான் செல்ல திட்டமிட்டுள்ளார்.
ஆந்திர மாநில புதிய தலை நகரம் விஜயவாடா-குண்டூர் மாவட் டங்களில் அமையும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித் துள்ளார். மேலும் தலைநகரை அமைப் பதற்காக தனிக் குழுவும் அமைக்கப் பட்டுள்ளது. இக்குழு புதிய தலைநகருக்கு தேவையான அரசு, தனியார் நிலங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் புதிய தலைநகரம் மற்றும் மாநிலத்தில் உருவாக உள்ள ஸ்மார்ட் சிட்டிகளை புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு விரும்புகிறார். இதுதொடர்பாக ஜப்பான் தொழில்நுட்பக் கலைஞர் களுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு வார்த்தை நடத்தி னார். இதில் ஜப்பான் தூதரக அதிகாரி கள், அமைச்சர்கள், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திர தலை நகரத்தை அமைக்க ஜப்பான் அரசு முன்வந்துள்ளது மகிழ்ச்சி யளிக்கிறது. கிருஷ்ணா நதியின் இருபுறமும், விஜயவாடா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் தலைநகரம் அமைய உள்ளது.
இதில் 434 அரசு அலுவலகக் கட்டி டங்கள், அரசு ஊழியர் குடியிருப் புகள் அமையும். ஒவ்வொரு கட்டிடமும் 40-45 மாடிகளைக் கொண்டதாக இருக்கும். மேலும் கால்வாய்கள், மின்சார விநியோ கம், சாலைகள், சுரங்க பாதைகள், மெட்ரோ ரயில் பாதை ஆகிய நவீன வசதிகளுடன் அமையும்.
ஆந்திர தலைநகரை நாட்டின் தலைநகரான டெல்லியைவிட அழகாக அமைப்பதே எனது லட்சியம். இதற்குத் தேவையான நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்கும் இருக்கும். இதற்காக அடுத்த மாதம் ஜப்பான் சென்று அங்குள்ள நகர தொழில்நுட்பங்களை கேட்டறிந்து, அதன்படி ஆந்திர தலைநகரம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.