மங்கள்யான் சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி நிறைவு

மங்கள்யான் சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி நிறைவு
Updated on
1 min read

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி முற்றிலும் நிறைவடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலையில் 1.27 மணிக்கு சுற்றுவட்டப் பாதை 5-வது மற்றும் கடைசி முறையாக அதிகரிக்கப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின் சுற்று வட்டப் பாதை 1 லட்சத்து 92 கிலோமீட்டராக அதிகரிப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 7- ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை முதல் முறையாக அதிகரிக்கப்பட்டது. 8-ஆம் தேதி 2வது முறையாகவும், 8-ஆம் தேதி 3வது முறையாகவும் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

விண்கலத்தின் பாதையை 4-வது முறையாக அதிகரிக்கும் முயற்சியின்போது சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பிறகு, அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதால் விண்கலம் திட்டமிட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

நவம்பர் 16-ஆம் தேதியுடன் இந்தப் பணி முற்றிலுமாக நிறைவு பெறும் என தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலையில் மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது.

இதனையடுத்து ‘மங்கள்யான்’ விண்கலம் படிப்படியாக அதன் தூரத்தை அதிகப்படுத்தி செவ்வாயை நோக்கி பயணமாகும்.

‘மங்கள்யான்’ விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் நவம்பர்- 5 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in